
மும்பை தாக்குதலை இந்திய அரசாங்கமும் மகாராஷ்டிர அரசாங்கமும் கையாண்ட விதம், இந்தியாவின் தற்காப்பு திறமையைப் பற்றிய மோசமான இமேஜை உலகத்துக்கு கொடுத்திருக்கின்றது. ஆரம்ப தினங்களில் அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக நிலைமையை கையாண்டாலும், மக்களின் கொதிப்பை பார்த்து திரைமறைவில் பாகிஸ்தானை படிய வைக்க முயற்சி செய்கின்றது. அதன் விளைவால் Zaki-ur-Rehman Lakhvi போன்ற தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒப்படைக்குமா அல்லது நாம்கே வாஸ் விசாரணை நடத்தி விடுதலை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.எது எப்படி இருந்தாலும், மும்பை தாக்குதல் மக்களிடம் ஒரு புரட்சியை உருவாக்கியிருக்கிறது. இது வரை "adjust karo" என்ற எண்ணத்தால் வாழ்ந்தவர்கள் "பொறுத்தது போதும்" என்று போங்கி எழுந்திருப்பது இந்தியாவின் திருப்புமுனையாக இருக்கும்.

அது பொறுப்பில்லாத அரசியல்வாதிகளுக்கு சாவு மணியாகவும் இருக்கும்.இந்த பதிவுக்கு தொடர்புள்ள புத்தகம்: The Tipping Point by Malcolm Gladwell. இந்தியாவில் இந்த புத்தகம் குறைந்த விலைக்கு கிடைக்கலாம். நேரம் கிடைத்தால் அவசியம் படியுங்கள். சில திருப்புமுனைகளால் சரித்திரங்கள் திருத்தி எழுதப்படுவதை அருமையாக விளக்கும் புத்தகம் இது.